ரேஷன் பொருளை பயன்படுத்திய உணவகத்தில் வட்டாட்சியர் சோதனை

உளுந்தூர்பேட்டையில் உணவகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்த வட்டாட்சியர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ரேஷன் பொருளை பயன்படுத்திய உணவகத்தில் வட்டாட்சியர் சோதனை
X

உணவகத்தில் கைப்பற்றப்பட்ட ரேஷன் பொருட்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விருதாச்சலம் ரோடு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே உள்ள மலர் உணவகம் மற்றும் தேனீர் கடை உள்ளது .

இந்த உணவகத்தில் உணவுப்பொருளில் தரமற்ற பொருட்களை கலப்படம் செய்து உணவு செய்வதாகவும், நியாயவிலைக் கடையிலிருந்து அரசி பருப்பு சர்க்கரை பாமாயில் ஆகிய பொருள்களை நியாய விலை கடை விற்பனையாளரிடம் மறைமுகமாக பணம் கொடுத்து மூட்டை மூட்டையாக வாங்கி வந்து கடையில் உள்ள குடோனில் மூட்டை மூட்டையாக அடுக்கி உள்ளதாகவும் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் உடனடியாக கடைக்கு வந்து அதிரடி சோதனை நடத்தியபோது சுமார் ஒரு டன் ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ரேஷன் பொருட்களை எடுத்து ரைஸ் மில்லில் அரைத்து மாவுகளை உணவுப் பொருளில் கலப்படம் செய்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அவர்கள் கிராம உதவியாளர்கள் மூலம் அனைத்தையும் கைப்பற்றி வட்டாட்சியர் வாகனத்திலேயே ஏற்றி எடுத்துச்சென்றனர் .இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது .

Updated On: 17 Oct 2021 3:58 PM GMT

Related News