/* */

கள்ளக்குறிச்சி மாவட்ட 2ம் கட்ட தேர்தல்: பொது பார்வையாளர் ஆய்வு

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் விவேகானந்தன் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்ட 2ம் கட்ட தேர்தல்: பொது பார்வையாளர் ஆய்வு
X

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் பொது பார்வையாளர் விவேகானந்தன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக பயன்படுத்தப்படவுள்ள தேர்தல் உபகரணங்கள் தொடர்பாக மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் விவேகானந்தன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் தெரிவித்ததாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற அறிவிக்கப்பட்டு, முதற்கட்ட வாக்குப்பதிவு 6.10.2021 அன்று முடிவுற்றன.

மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி, தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம் மற்றும் கல்வராயன்மலை ஆகிய ஒன்றியங்களுக்குக்கான வாக்குப்பதிற்குண்டான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதன்படி, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. மேலும், கள்ளக்குறிச்சி ஒன்றிய உள்ளாட்சிப் பதிவியிடங்களுக்கு 249 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைப்பெறுவதை முன்னிட்டு, வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தவுள்ள படிவங்கள், வாக்குச்சீட்டுகள் கவனமாக பிரித்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மேலும்,கொரோனா தொற்றுள்ள வாக்காளர்களுக்கு, வாக்களிக்க ஏதுவாக கொரோனா பாதுகாப்பு உடைகள் மற்றும் இதர உபகரணங்களையும், பாதுகாப்பாக அனுப்பிட தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாய்வின் போது கள்ளக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 7 Oct 2021 2:55 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது