/* */

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 70.74 அடியாக உள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 70.74 அடியாக உள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி முதல் கீழ்பவானி இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 2வது சுற்றுக்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால், பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து 49 கன அடியாக உள்ளது.

மேலும், அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 70 அடியாக சரிந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (பிப்.25) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 70.74 அடி ,

நீர் இருப்பு - 11.26 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 49 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 900 கன அடி ,

பாசனத்திற்காக அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 800 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 25 Feb 2024 3:30 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  5. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  7. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  8. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  9. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  10. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு