/* */

இன்றைய (ஜூன்.07) ஈரோடு மாவட்ட முக்கிய செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் இன்று நடந்த முக்கிய செய்திகள் இதே.! உங்கள் பார்வைக்கு..

HIGHLIGHTS

இன்றைய (ஜூன்.07) ஈரோடு மாவட்ட முக்கிய செய்திகள்
X

கோப்பு படம்

அந்தியூர் செய்திகள்:-

* அந்தியூர் அடுத்த பர்கூரில் 2,000 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்த மூன்று பேரையும் பர்கூர் போலீசார் கைது செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை ஈரோடு மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

* அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் நீரோடை ஆக்கிரமிப்பை அந்தியூர் மண்டல வட்டாட்சியர் ரவி , அத்தாணி வருவாய் ஆய்வாளர் நந்தக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

* அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ராஜேந்திரனை அந்தியூர் போலீசார் கைது செய்து, 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

* அந்தியூர் புதுப்பாளையத்தில் இன்று மாலை நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் 2,050 வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் ரூ.4.71 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் செய்திகள்:-

* டி.என்.பாளையத்தில் இருந்து பவானிக்கு ரேஷன் அரிசியை கடத்தி முயன்ற வாலிபரை பங்களாப்புதூர் போலீசார் கைது செய்து, 2 டன் ரேஷன் அரிசியை ஈரோடு மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பவானி செய்திகள்:-

* அம்மாபேட்டை அருகே தலைமை காவலரை மது போதையில் தாக்கிய லாரி டிரைவர் நாகராஜை அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரிச்சேரிப்புதூர் பகுதியை சேர்ந்த 16-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி சிபிஐ கட்சி சார்பில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

* ஆப்பக்கூடல் மது பானக்கடை அருகே பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கூத்தம்பூண்டியை சேர்ந்த மாரிமுத்து மீது ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* அத்தாணி அருகே உள்ள குப்பாண்டம்பாளைத்தை சேர்ந்த மாடு வியாபாரி கருப்புசாமி. புஞ்சைபுளியம்பட்டி மாட்டு சந்தைக்கு சென்றவர் வீடு திரும்பாததால் அவரை கண்டு பிடித்து தரக்கோரி மனைவி ஆப்பக்கூடல் போலீசில் புகார் செய்துள்ளார்.

ஈரோடு மாநகர் செய்திகள்:-

* ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் விசாரணையை முடித்த மருத்துவ குழுவினர் நேற்று ஈரோடு எஸ்.பி.,யுடன் ஆலோசனை நடத்தினர். இவ்விவாகரத்தில் கைது செய்யப்பட்டுள்ள, 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

* ஈரோட்டில் 2வது நாளாக நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக நம்பியூரில் 61.0 மி.மீ , பெருந்துறையில் 37.0 மி.மீ , சென்னிமலையில் 35.0 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

* ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 213 மனுக்கள் பெறப்பட்டன. கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தார் குமரன் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டன.

* ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஜூன் 14ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் ராகுராமன் தெரிவித்துள்ளார்.

* ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில் துரித உணவு தயாரித்தல் பயிற்சி வரும் ஜூன் 20ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடக்கவுள்ளது.

Updated On: 7 Jun 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்