/* */

கீழ்வாணியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி‌ கிராம சபை கூட்டம்

அந்தியூர் அடுத்த கீழ்வாணியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, நாளை (24ந் தேதி) கிராம சபை கூட்டம் நடக்கிறது

HIGHLIGHTS

கீழ்வாணியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி‌ கிராம சபை கூட்டம்
X

கோப்பு படம்

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர் உத்தரவின் பேரில், நாளை (24ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீழ்வாணி ஊராட்சியில் சென்னிமலைகவுண்டன்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நாளை காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில், நீடித்த வளர்ச்சி இலக்குகளாக கிராம ஊராட்சி வறுமை ஒழிப்பு, ஊராட்சிகளில் உள்ள அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நலவாழ்வு வாழ்தல், அனைத்து குழந்தைகளும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வது.அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துதல் உட்பட 12 நீடித்த வளர்ச்சி தொடர்பான பொருள்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே, முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கிராம பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம்.

Updated On: 23 April 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்