/* */

ஈரோடு: உள்ளாட்சிகள் தினம், வரும் நவ. 1ல் கிராம சபை கூட்டம்

Erode news, Erode news today-ஈரோடு மாவட்டத்தில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடக்கிறது.

HIGHLIGHTS

ஈரோடு: உள்ளாட்சிகள் தினம், வரும் நவ. 1ல் கிராம சபை கூட்டம்
X
 Erode news, Erode news today  - வரும் நவ. 1ம் தேதி, கிராமசபை கூட்டம்

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வருகிற, நவ. 1-ம் தேதி கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினமான 01.11.2022-ம் தேதியன்று முற்பகல் 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். இதில் அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.

2022 நவம்பர் 1-ம் தேதி (உள்ளாட்சிகள் தினம்) அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், நவம்பர் 1-ம் நாளினை தமிழகத்தின் உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்து அதனைச் சிறப்பிக்கும் விதமாக கிராம சபை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட உத்தரவு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களை சிறப்பித்தல்,

கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், 2021-22 மற்றும் 2022-23-ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமவர்ச்சி திட்டம்-I-ன் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரத்தினை கூட்டத்தில் வைத்தல், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு பணி முடிவுற்ற விவரத்தினை கிராம சபைக்கு தெரிவித்தல்,

ஜல் ஜீவன் திட்டத்திற்கு நம் ஊராட்சியில் உள்ள அனைவரும் தவறாமல் சமுதாய பங்களிப்பினை செலுத்தி இத்திட்டத்தின் செயல்பாட்டில் துணை நிற்போம் என தீர்மானம் நிறைவேற்றுதல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள/எடுக்கப்பட வேண்டிய பணிகளுக்கு கிராம சபையில் ஒப்புதல் பெறுதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி / சொத்துவரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உருவாக்குதல், 2021-22 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பன்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களின் மேற்கொள்ளப்பட்ட நிதிசெலவின அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை அளித்தல், மக்கள் நிலை ஆய்வுப் பட்டியலில் விடுபட்ட / புதிய இலக்கு மக்கள் குடும்பங்களை சேர்த்தல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும்.

அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவனதக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நவம்பர் 1-ம் தேதியன்று திட்டப் பணிகள் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளது.

Updated On: 29 Oct 2022 10:10 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்