/* */

பவானியில் ஜமுக்காள நெசவுத்தொழிலில் புதிய முயற்சி

பவானியில் ஜமுக்காள தயாரிப்பில் புதிய முயற்சியாக 8அடி அகலமும் 16 உயரமும் கொண்ட தேர் வடிவிலான ஜமுக்காளத்தை செய்துள்ளனர்

HIGHLIGHTS

பவானியில் ஜமுக்காள நெசவுத்தொழிலில் புதிய முயற்சி
X

 பவானியில் ஜமுக்காள நெசவுத்தொழிலில் புதிய முயற்சியாக தொழில்நுட்ப பயன்படுத்தாமல், 8அடி அகலமும் 16 உயரமும் கொண்ட தேர் வடிவிலான ஜமுக்காளத்தை கைத்தறி நெசவாளர்கள் செய்துள்ளதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டத்தில் ஜமுக்காள நகரம் என்று அழைக்கப்படும் பவானியில் பிரதானமாக நூற்றாண்டுகள் கடந்து ஜமுக்காள நெசவுத் தொழில் செய்யபட்டு வருகிறது.இதில் ஆயிரக்கணக்கான ஜமுக்காள கைத்தறி கூட்டங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது ஜமுக்காள தொழில் நலிவடைந்து வரும் நிலையில் உள்ளது.ஜமுக்காளத்தில் பல்வேறு வடிவிலான உருவ வடிவமைப்பு செய்து வந்த தொழிலாளர்கள்.

தற்போது புதிதாக ஜமுக்காளத்தில் தேர் வடிவத்தை கொண்டு வந்துள்ளனர். 8அடி அகலமும் 16அடி உயரமும் கொண்ட ஜமுக்காளத்தை எவ்வித தொழில்நுட்ப பயன்படுத்தாமல் தேரை தத்ரூபமாக வடிவமைத்து உள்ளனர்.மேலும் இதனை உருவாக்க 3கிலோ பாவு நூலும் 12கிலோ நார் பட்டு நூலும் கொண்டு 20நாட்களில் வடிவமைத்து இருப்பதாக நெசவாளர்கள் தெரிவித்தனர்.இந்த ஆர்டர் காரைக்குடியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்திடம் இருந்து வந்திருப்பதாகவும் இந்த ஜமுக்காளம் வெளிநாடு செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து இது போன்று ஜமுக்காளத்தில் நேர்த்தியாக உருவ வடிவமைப்பு கொண்டு வரும் நெசவாளர்கள் குறைந்த அளவில் இருப்பதால் இத்தொழிலை பாதுகாக்க அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கப்பட வேண்டும் என ஜமுக்காள கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து ஜமுக்காள கைத்தறி தொழிலை பாதுகாக்க அரசு கைத்தறி துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Updated On: 29 April 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!