/* */

சுற்றுச்சூழல் மாசு: தனியார் தொழிற்சாலை மீது பொதுமக்கள் புகார்

இந்த நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சுற்றுச்சூழல் மாசு: தனியார் தொழிற்சாலை மீது பொதுமக்கள் புகார்
X

தனியார் நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், கஸ்பாபேட்டை ஊராட்சி, வாவிகாட்டு வலசு கிராமத்தில் எஸ்பிஎம் வீவிங்மில் என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் பஞ்சு துகள்களால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதோடு பொதுமக்களுக்கு சுவாச கோளாறு, தோல்நோய் போன்ற பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மே தினத்தை முன்னிட்டு கஸ்பாபேட்டை ஊராட்சியில் தலைவர் சித்ரா அர்ஜூணன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுசூழலை பாதிக்கும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை நிறுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.

பொதுமக்களின் மனுவை ஏற்று நிலத்தடி நீரை குடிநீர் ஆதாரத்தை மாசடைய செய்யும் எஸ்பிஎம் வீவிங் தொழிற்சாலையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களை பாதிக்கும் தொழிற்சாலையை நிறுத்துவது தொடர்பான தீர்மானம் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வைக்ப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 2 May 2023 8:22 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  2. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  3. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  5. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  6. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  7. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  8. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
  9. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  10. மாதவரம்
    சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!