/* */

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அமைச்சர்கள் முத்துசாமி, நாசர் பிரச்சாரம்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அமைச்சர்கள் முத்துசாமி, நாசர் பிரச்சாரம் செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அமைச்சர்கள் முத்துசாமி, நாசர் பிரச்சாரம்
X

ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர்கள் முத்துசாமி, நாசர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள் முத்துசாமி, நாசர் பிரச்சாரம் செய்தனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்பிப்ரவரி மாதம் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டு பிரச்சாரத்தை துவங்கி விட்டனர்.இன்னும் வேட்பு மனு தாக்கல் தொடங்காத நிலையில் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

இந்நிலையில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்த சூரியன் பாளையம் பகுதிக்கு உட்பட்ட சூளை, அருள் வேலன் நகர் பகுதிகளில் அமைச்சர்கள் முத்துசாமி, நாசர் ஆகியோர் வீதி வீதி வீதியாகவும், வீடு வீடாகவும் சென்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தனர்.

அப்போது அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது:-

வழக்கமாக பிப்ரவரி இறுதி வரை பொங்கல் பண்டிகைக்கான வேட்டி சேலை வழங்கப்படும். இது குறித்து கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளார்.

இதேபோல் மின் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள விசைத்தறி நெசவாளர்கள் பிரச்னைகள் குறித்து ஏற்கெனவே மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இப்பிரச்னையை முதல்வரிடம் கொண்டு சென்று தீர்வு காண்பார்.

வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு தேடி வருகின்றார். அதனால் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை. வேட்புமனு தாக்கல் செய்த பிறகு 25 நாட்கள் பிரச்சாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரச்சாரத்தின் போது, ஈரோடு மாநகர் தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், மேயர் நாகரத்தினம், சஞ்சய் சம்பத் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Jan 2023 9:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  2. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  3. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  5. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  6. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  7. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  8. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  9. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  10. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...