/* */

அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீரேற்று நிலையங்களில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், எம்மாம்பூண்டி மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் கிரே நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீரேற்று நிலையங்களை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீரேற்று நிலையங்களில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
X

பெருந்துறை கிரே நகர் பகுதியில் அமைந்துள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்ட 4-ம் நீரேற்று நிலையத்தினை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், எம்மாம்பூண்டி மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் கிரே நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீரேற்று நிலையங்களையும் மற்றும் திருப்பூர் மாவட்டம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்களுக்கு சோதனை ஓட்டத்தில் நீர் செல்லும் பணியினையும், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் கிரே நகர் பகுதியில் அமைந்துள்ள 4-ம் நீருந்து நிலையத்திலிருந்து நீர் வெளியேற்றி சோதனை ஓட்டம் செய்யப்பட்டு அருகாமையில் உள்ள குளங்களுக்கு நீர் செல்வதை, அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு தெரிவிக்கையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்றுமுறையில் நிலத்தடியில் குழாய்பதிப்பின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் என மொத்தம் 1045 குளங்களுக்கு நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும், தற்போது 99% சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை மற்றும் ஆறு நீர்உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய இடங்களில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும், MS குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடிவடைந்துள்ளது (மொத்த நீளம் 267.5 கி.மீ) மற்றும் HDPE குழாய்கள் பதிக்கும் பணிகள் தற்போத துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்சமயம் சுமார் 797.50 கி.மீ. அளவு HDPE குழாய் (மொத்த நீளம் 797.8 கி.மீ) பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின்மாற்றிகள், VT பம்புகள், மின்மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர்உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி 100% முடிவுற்றுள்ளது (மொத்த நீளம் 63.15 கி.மீ. மேலும், நிலம் பயன்பாட்டு உரிமை (RIGHT OF USE) பெறும்பணி 100% முடிவுற்றுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற நீர்வளத்துறை உயர்மட்டக் கூட்டத்தின் நிகழ்வு குறிப்பு அறிக்கை தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டு திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட‌ கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குளம் குட்டைகளில் Outlet Management System (OMS) பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்சமயம் சுமார் 1044 எண்கள் பொருத்தப்பட்டுள்ளது (மொத்தம் 1045 எண்கள்). இத்திட்டத்திற்கு இதுவரை ரூ.1624.73 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20.02.2023 முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை ஆறு நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதானக் குழாய்களில் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரேற்று நிலையங்களிற்கு இடையிலுள்ள கிளைக் குழாய் (Feeder Line) மற்றும் 1045 குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள OMS கருவிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர தொடர்புடைய அலுவலர்கள் தங்களது பணிகளை விரைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். முன்னதாக, பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் கிரே நகர் பகுதியில் அமைந்துள்ள 4-ம் நீருந்து நிலையத்திலிருந்து சோதனை ஓட்டமாக நீர் திறக்கப்பட்டு திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், குன்னத்தூர் குளம், ஆதியூர் குளம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் மேற்குபதி குளம் ஆகிய குளங்களுக்கு நீர் செல்வதையும் பார்வையிட்டார்.


தொடர்ந்து, , நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், எம்மாம்பூண்டியில் அமைந்துள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்ட 5-ம் நீரேற்று நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது, திருப்பூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், கண்காணிப்பு பொறியளார் (அத்திக்கடவு அவிநாசி திட்டம்) சிவலிங்கம், நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் மன்மதன் (பெருந்துறை), நரேந்திரன் (அவிநாசி), நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 May 2023 2:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...