/* */

திமுக வேட்பாளரை ஆதரித்து ஈரோட்டில் இன்று கமல்ஹாசன் பிரசாரம்

Erode news- ஈரோடு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து ஈரோட்டில் இன்று (வெள்ளிக்கிழமை ) கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

HIGHLIGHTS

திமுக வேட்பாளரை ஆதரித்து ஈரோட்டில் இன்று கமல்ஹாசன் பிரசாரம்
X

Erode news- கமல்ஹாசனின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம்.

Erode news, Erode news today- ஈரோடு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து ஈரோட்டில் இன்று (வெள்ளிக்கிழமை ) கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (29ம் தேதி) முதல் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். அதன்படி, ஈரோடு தொகுதியில் 'இந்தியா கூட்டணி' சார்பில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் இன்று (29ம் தேதி) வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை ஈரோட்டில் தொடங்குகிறார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்று மாலை 5.30 மணிக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதைத் தொடர்ந்து இரவு 6.30 மணிக்கு கருங்கல்பாளையத்திலும், இரவு 7.30 மணிக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெப்படையிலும் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

Updated On: 29 March 2024 12:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’