/* */

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை

Government Polytechnic College Perundurai- ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை
X

Erode news, Erode news today- பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி (பைல் படம்).

Government Polytechnic College Perundurai-இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில், 2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கு நேரடி இரண்டாமாண்டு (Direct Second Year Diploma Admission) முழுநேர பட்டயப் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் (Online) வாயிலாக விண்ணப்பிக்க வரவேற்கப்படுகின்றன. இணையதளத்தில் 08.05.2023 முதல் 26.05.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

இக்கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மற்றும் கணினி பொறியியல் ஆகிய ஐந்து முழுநேரப் பாடப்பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப்பிரிவினர் (BC MBC / OBC / DNC / OC) ரூ.150/- பதிவுக் கட்டணமாக Credit card/ Debit Card / Net Banking மூலம் செலுத்த வேண்டும்.பழங்குடி/பட்டியல் (SC/ST) பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக் கட்டணம் இல்லை.

நேரடி இரண்டாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் "Passed 10/+2 examination with Physics / Mathematics / Chemistry / Computer Science / Electronics / Information Technology / Biology / Informatics Practices / Biotechnology/Technical Vocational Subject / Agriculture / Engineering Graphics/ Business Studies / Entrepreneurship (Any of the three)" அல்லது அதற்குச் சமமான படிப்பு பயின்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 April 2024 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்