/* */

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (ஏப்.,18) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 29 கன அடியாக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (ஏப்.,18) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 29 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி முதல் கீழ்பவானி இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 4வது சுற்றுக்கான தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால், பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 18 கன அடியாக இருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 29 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 46 அடியாக சரிந்துள்ளது.

வியாழக்கிழமை (ஏப்ரல் 18) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 46.41 அடி,

நீர் இருப்பு - 3.62 டிஎம்சி,

நீர் வரத்து வினாடிக்கு - 29 கன அடி,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 205 கன அடி,

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Updated On: 18 April 2024 3:55 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  3. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  4. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  5. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  8. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  10. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...