/* */

அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

Erode news- ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி சிறுவன் உள்பட பக்தர்கள் இருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
X

Erode news- பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஹரீஸ் ராஜ், சீனிவாசன். (கோப்பு படங்கள்)

Erode news, Erode news today- அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்தபோது பவானி ஆற்றில் மூழ்கி சிறுவன் உள்பட பக்தர்கள் இருவர் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி துப்புரவு காலனியில் கருமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் தீர்த்தம் எடுக்க அத்தாணி அருகே கைகாட்டி பிரிவில் உள்ள பவானி ஆற்றுக்கு 50க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் இறங்கிய அந்தியூர், துப்புரவு காலனியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 45), சங்கராபாளையம், வள்ளலார்புரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஹரீஸ்ராஜ் (வயது 13) ஆகியோர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர். அருகிலிருந்தவர்கள் மீட்க முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அந்தியூர் தீயணைப்புத் துறை வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சீனிவாசன், ஹரீஸ்ராஜ் ஆகியோரது உடலை மீட்டனர். பின்னர், ஆப்பக்கூடல் போலீசார் இருவரது சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க வந்த பக்தர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 30 April 2024 8:30 PM GMT

Related News