/* */

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி பெற்று பயன்பெறலாம்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
X

கோடைகால நீச்சல் பயிற்சி (பைல் படம்)

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குறைந்த கட்டணத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது..

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் நீச்சல் குளம் உள்ளது. இங்கு, மாணவ, மாணவிகளுக்கான கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் வருகிற ஜூன் மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் செயல்படும் நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பு வரும் ஜூன் மாதம் வரை நடைபெறும். அதில், 10 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் நீச்சல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு நீச்சல் பயிற்சி பெறலாம். பயிற்சி வகுப்புகள் 12 வேலை நாட்கள் நடத்தப்படும்.

அதற்கான பயிற்சி கட்டணம் ரூ. 1,500 என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிர்ணயித்துள்ளது. நீச்சல் பயிற்சி பெறுவோர் அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசரைப் பயன்படுத்த வேண்டும். சளி அல்லது இருமல் இருக்கும் பட்சத்தில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். காய்ச்சல், இருமல், தசை வலி, தலை வலி, அனோஸ்மியா போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் நீச்சல் குளத்தினை பயன்படுத்த அனுமதியில்லை.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 May 2024 2:09 AM GMT

Related News