சத்தியமங்கலம் அருகே சிறுத்தை புலி அட்டகாசம்: 2 ஆடுகள் பலி

சத்தியமங்கலம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 2 ஆடுகளை சிறுத்தை புலி அடித்து கொன்றதில் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சத்தியமங்கலம் அருகே சிறுத்தை புலி அட்டகாசம்: 2 ஆடுகள் பலி
X

பலியான ஆடுகள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவருக்கு சொந்தமான நிலம் பெரியகுளம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலத்தில் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார். வனப்பகுதியை ஒட்டி உள்ள காலி இடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆடு , மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு ஆடுகள் திரும்பவில்லை. இதனையடுத்து மேய்ச்சல் பகுதிக்கு சென்று பார்த்தபோது இரண்டு ஆடுகள் இறந்து கிடந்தன. இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆடுகளை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த விலங்கின் கால் தடங்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு பதிவாகி இருந்த கால் தடம் சிறுத்தையின் கால் தடம் என கண்டுபிடித்தனர். வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் ஆடு, மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சிறுத்தையானது, இரண்டு ஆடுகளளை அடித்து கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 17 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல்: அறை கண்காணிப்பாளர்கள்...
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு குறித்த முன்னேற்பாடு ஆய்வு...
 3. கோயம்புத்தூர்
  தமிழகத்தை பொருளாதாரத்தில் உயர்த்த கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானது ...
 4. விழுப்புரம்
  விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஆடுகளம் செயலி: கலெக்டர் மோகன் தகவல்
 5. நீலகிரி
  மலைவாழ் மக்களுடன் நடனமாடிய முதல்வர் ஸ்டாலின்!
 6. ஈரோடு
  கவுந்தப்பாடி செட்டிபாளையத்தில் வழிபாட்டு நடுகல் நடும் இடம்...
 7. குமாரபாளையம்
  பள்ளிபாளையத்தில் சி.பி.எம் ஆர்ப்பாட்டம்- 13 பெண்கள் உள்பட 36 பேர்...
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் இரண்டு ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
 9. தமிழ்நாடு
  பேரறிவாளனை 50000 பேர் சிறையில் சந்தித்தனர்: 'அள்ளி' விட்ட சீமான்
 10. குமாரபாளையம்
  சங்கடஹர சதுர்த்தி: குமாரமங்கலம் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு