/* */

ஆசனூர் அருகே காட்டு யானை குட்டியுடன் சாலையை வழிமறித்து நின்றதால் பரபரப்பு

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் ஆசனூர் அருகே காட்டு யானை குட்டியுடன் சாலையை வழிமறித்து நின்றதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

ஆசனூர் அருகே காட்டு யானை குட்டியுடன் சாலையை வழிமறித்து நின்றதால் பரபரப்பு
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் மான், யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கொரோனா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது வனவிலங்குகள் சாலையோரம் நடமாடி வருகின்றன.


இந்நிலையில் இன்று ஆசனூர் சீவக்காய் பள்ளம் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை தனது குட்டியுடன் சாலையில் நின்று தீவனம் உட்கொண்டு இருந்தது இதை கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சாலையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் சுமார் அரை மணி நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது அதன் பின் வாகனங்கள் செல்ல தொடங்கியது. நீண்ட நேரம் சாலையை வழிமறித்து நின்ற யானையால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 3 Jun 2021 10:34 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  6. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  7. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  9. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  10. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா