/* */

பர்கூர் மலைப்பகுதியில் யானை மிரட்டலுக்கு இடையே பெண்ணிற்கு பிறந்த குழந்தை

யானை ஒரு புறம் மிரட்ட அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

HIGHLIGHTS

பர்கூர் மலைப்பகுதியில் யானை மிரட்டலுக்கு இடையே பெண்ணிற்கு பிறந்த குழந்தை
X

ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தையுடன் மருத்துவ உதவியாளர் சிவா.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் தேவர்மலை என்ற மலை கிராமத்தில் சிவம்மாள் என்பவருக்கு நேற்று இரவு பிரசவ வலி வரவே 108 ஆம்புலன்சை அழைத்துள்ளனர், தொடர்ந்து அங்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் சிவம்மாள் மற்றும் அவரது உறவினர்களை ஏற்றிக்கொண்டு, பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது தாமரைக்கரையை அடுத்து குண்டுகள் பசுவேஸ்வரர் கோவில் என்ற இடத்தில் சிவம்மாளுக்கு அதிகப் பிரசவவலி வரவே 108 ஆம்புலன்ஸை ஓரமாக நிறுத்தி அடர்ந்த வனப் பகுதியிலேயே அவசரகால மருத்துவ உதவியாளர் சிவா பிரசவம் பார்த்தார், அப்போது சிவம்மாளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.


மேலும், இங்கு பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தபோதே 500 மீட்டர் தூரம் தள்ளி சுண்டப்பூர் பிரிவு என்ற இடத்தில் பெண் யானை ஒன்று நின்று கொண்டிருப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆனந்தனிடம் தெரிவித்தனர்.தொடர்ந்து பிரசவம் முடித்துக்கொண்டு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வண்டியை எடுத்து கொண்டு சென்ற போது யானை அதே இடத்தில் நின்று கொண்டு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தது, சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்த பின்னர் யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது, அதை தொடர்ந்து அரசு ஆரம்பப் சுகாதார மையத்திற்குச் சென்று தாய் மற்றும் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர், அங்கு அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் யானை இருந்தும், பதற்றமடையாமல் பிரசவம் பார்த்து மருத்துவமனையில் தாயையும் சேயையும் பத்திரமாக சேர்த்த அவசரகால மருத்துவ நிபுணர் சிவா மற்றும் ஓட்டுநர் ஆனந்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.பர்கூர் -தாமரைக்கரை பிரதான சாலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றித்திரிந்த நிலையில், நேற்று இரவு சுண்டப்பூர் பிரிவு என்ற இடத்தில் பெண் யானை ஒன்று சாலையில் உலா வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!