/* */

ஈரோடு: கோபி அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த அழகான பெண் குழந்தை

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

HIGHLIGHTS

ஈரோடு: கோபி அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த அழகான பெண் குழந்தை
X

Erode news- 108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தையுடன் அவசரகால மருத்துவ உதவியாளர் பவித்ரா.

Erode news, Erode news today- கோபி அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூமணி (வயது 29). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று இரவு 11 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சுக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.என்.பாளையம் 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ உதவியாளர் பவித்ரா, அவசர சிகிச்சை வாகன ஓட்டுநர் உதயகுமார் ஆகியோர் பூமணியை மீட்டு கோபி அரசு மருத்துவமனை நோக்கி விரைந்து சென்றனர்.

ஆசாரிமேடு பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது பூமணிக்கு பிரசவ வலி அதிகமாகவே வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி மருத்துவ உதவியாளர் பவித்ரா அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதில், 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

பின்னர், முதலுதவி அளித்து கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கு தாய், சேய் 2 பேரும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ உதவியாளர் பவித்ரா மற்றும் அவசர சிகிச்சை வாகன ஓட்டுநர் உதயகுமார் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Updated On: 21 April 2024 1:45 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  4. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  5. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  6. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  10. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!