/* */

திமுகவின் நூறு நாள் சாதனையை துண்டு பிரசுரங்களாக வெளியிட கோரிக்கை

திமுகவின் நூறு நாள் சாதனையை துண்டு பிரசுரங்களாக வெளியிட வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ இன்பசேகரன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திமுகவின் நூறு நாள் சாதனையை துண்டு பிரசுரங்களாக வெளியிட கோரிக்கை
X

தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பி.என்.பி.இன்பசேகரன்

இதுகுறித்து தர்மபுரி மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பி.என்.பி.இன்பசேகரன் கூறியதாவது:

திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமை‌யிலான அரசு அமைத்து 14.8.2021 அன்றுடன் 100 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணிக்க பெண்களுக்கு கட்டணமில்லை, ஆவின் பால் விலைகுறைப்பு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா கால நிவாரணதொகை வழங்கியது. கொரோனா தடுப்புக்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை உடனடியாக பூர்த்தி செய்தது, மக்கள் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம் வசதி செய்தது.

தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், பேரூராட்சிகளிலும், கிராமங்களிலும் கழகக் கொடி ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியும், வீடுகள் தோறும் அரசு நிறைவேற்றியுள்ள மக்கள் நலத் திட்டங்களை துண்டு பிரசுரங்களாக விநியோகிப்பதுடன், திண்ணை பிரச்சாரங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், முன்னாள் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான பிஎன்பி இன்பசேகரன் தெரிவித்துள்ளார்.



Updated On: 13 Aug 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  4. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  5. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  7. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  9. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  10. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்