/* */

மீன் விற்பனை நிலையங்களில், உணவு பாதுகாப்பு சான்றிதழ் எடுக்காவிட்டால் அபராதம்

உணவு பாதுகாப்பு சான்றிதழ் உடனடி அபராதம் ஐந்தாயிரம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மீன் விற்பனை நிலையங்களில், உணவு பாதுகாப்பு சான்றிதழ் எடுக்காவிட்டால் அபராதம்
X

மீன் கடையில் ஆய்வு மேற்கொள்ளும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

தர்மபுரி மாவட்டம் முழுதும் உள்ள மீன் விற்பனை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி பரிந்துரைத்துள்ளார்.

அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா மற்றும் மீன் வளத்துறை உதவி இயக்குனர் கோகுல ரமணன் வழிகாட்டலின் படி, பாலக்கோடு மீன் மார்க்கெட் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் மீன்வளத்துறை சார் ஆய்வாளர் வெங்கடேசன், மீன்வள பாதுகாவலர் முருகன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் மீன்கள் பார்வையிட்டு இருப்பு மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த திலேபியா, ரோக், ரூப்சந்த், மிருதுளா மீன்கள் என அனைத்து வகையான மீன்களையும் ஆய்வு செய்தனர்.

மேலும் மீன்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க, மீன்களில் பார்மலின் உபயோகப் படுத்தப்பட்டு இருக்கிறதா என பார்மலின் டெஸ்ட் கிட் உபகரணம் கொண்டு ஆய்வு செய்தனர். வெளி மாநில (ஆந்திரா) மீன் மற்றும் உள்ளூர் மீன்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் பார்மலின் ஏதும் கலந்து விற்பனை செய்யப்படவில்லை என அறியப்பட்டது.

இரண்டு கடைகளில் இருந்து மட்டும் தரம் குறைவான மீன்கள் சுமார் 20 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டு, அப்புறப்படுத்தி பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் அந்த கடைக்காரர்களுக்கு தலா ரூ.1000 விதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தவிர உணவு பாதுகாப்பு உரிமம் ஒரு சில கடைகள் மட்டும் பெற்றுள்ளனர். எடுக்காதவர்கள், புதுப்பிக்காதவர்கள் 7 தினங்களுக்குள் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டது. உணவு பாதுகாப்பு சான்றிதழ் எடுக்காவிடில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி உடனடி அபராதம் ஐந்தாயிரம் விதிக்க மாவட்ட நியமன அலுவலர் உத்தர விட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆய்வுகள் மாவட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 29 Jun 2023 1:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!