/* */

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்; சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்.

HIGHLIGHTS

தர்மபுரி நகரிலுள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி, நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி மற்றும் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் நந்தி மற்றும் சாமிக்கு அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சாமி கோயில் வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி உடனமர் மருதவாணேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சிவன் கோவில், சவுளுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதேசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Updated On: 5 Oct 2021 9:59 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’