/* */

ஒட்டப்பட்டி பகுதியில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை; எம்எல்ஏ ஆய்வு

தர்மபுரி சேலம் நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க ஒட்டப்பட்டி பகுதியில் ரவுண்டான அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

ஒட்டப்பட்டி பகுதியில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை; எம்எல்ஏ ஆய்வு
X

தர்மபுரி சேலம் நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க ஒட்டப்பட்டி பகுதியில் ரவுண்டானா அமைக்க  எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார்

தருமபுரி சேலம் நெடுஞ்சாலையில் ஒட்டப்பட்டி பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுவதால் ரவுண்டானா அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் வெங்கடேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஸ்வரன் விபத்து ஏற்படும் இடத்தை ஆய்வு செய்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் ரவுண்டானா அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அரசு கலைக்கல்லூரி அருகே சாக்கடை வசதி முறையாக இல்லாததால் தண்ணீர் சாலையில் வழிந்துதோடி வரும் பகுதிகளை ஆய்வு செய்து சாக்கடை கால்வாய் பணிகளை முறையாக அமைத்து தண்ணீர் வெளியேற வசதி செய்து தர கோட்ட பொறியாளர் குலோத்துங்கனிடம் அறிவுறுத்தினார்.

இதே போல ஏமகுட்டியூர் பகுதியில் உள்ள ஏரிக்கு தடுப்பு சுவர் கட்டவும் மின் வாரிய அலுவலகத்திலிருந்து ஏமகுட்டியூர் செல்லும் சாலையில் இரு இடங்களில் பாலம் அமைக்கவும் ஆய்வு மேற்க்கொண்டார்.

படவிளக்கம்

தர்மபுரி சேலம் நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க ஒட்டப்பட்டி பகுதியில் ரவுண்டான அமைக்க பொதுமக்கள் கோரிக்கை எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார்

Updated On: 30 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?