/* */

நவராத்திரி விழா: தர்மபுரியில் அனைத்து கோவில்களிலும் கொலு வழிபாடு

நவராத்திரி விழாவையொட்டி தர்மபுரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் கொலு வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. ஒவ்வொரு கோவிலிலும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் முக்கிய கோவில்களில் கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அந்தந்த கோவில்களில் கொண்டாடப்படும் திருவிழாக்கள், முக்கிய இந்துக்கள் பண்டிகை ஆகியவற்றை தத்ரூபமாக விளக்கும் வகையில் அலங்கார பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த விழாக்களில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 14-ம் தேதி வரை தினமும் நவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

தர்மபுரி நகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் இந்த கோயில் வளாகத்தில் உள்ள ஆனந்த நடராஜர், சென்னகேசவ பெருமாள் மற்றும் துர்க்கை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நவராத்திரி விழாவையொட்டி கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான களிமண் பொம்மைகள் கொண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கோவிலில் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவை தத்துரூபமாக பக்தர்களுக்கு விளக்கும் வகையில் அலங்கார பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நவராத்திரி கொலுவை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இதேபோன்று தர்மபுரி நகரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவில், நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவில், மங்களாம்பிகை உடனமர் மகாலிங்கேஸ்வரர் கோவில், கடைவீதிஅம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், வெங்கட்ரமண சுவாமி கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், அன்னசாகரம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. நவராத்திரி விழாவையொட்டி வீடுகளில் பெண்கள் கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Oct 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?