/* */

தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை கலைப்பு.!

பணம், நகை கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார்.

HIGHLIGHTS

தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை கலைப்பு.!
X

தருமபுரி மாவட்டத்தில், தேர்தல் முடிந்ததால் பறக்கும் படை சோதனை நிறைவு பெற்றது. பணம், நகை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடு நீங்கியது.

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கின்ற வகையில், மாவட்ட முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் இரவு, பகலாக சோதனை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே தேர்தல் கடந்த 6ம் தேதி நிறைவு பெற்றது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் இதுவரை ரூ.90 லட்சம் மதிப்பில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று 196 சவரன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில், தேர்தல் பறக்கும் படை சோதனை விலக்கிக் கொள்ளப்படும். பணம், நகை கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு பின்னர் தருமபுரி மாவட்டத்தில் 96 தேர்தல் பறக்கும் படை கலைக்கப்பட்டது. இனிமேல் வியாபாரிகள் தங்களது பணத்தை நிம்மதியாக எடுத்துச்செல்லாம்.

Updated On: 9 April 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!