/* */

கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக எஸ்.பியிடம் குழந்தைகளுடன் பெண் மனு

தர்மபுரி அருகே, கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாகக்கூறி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எஸ்.பி யிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக எஸ்.பியிடம் குழந்தைகளுடன் பெண் மனு
X

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த லூர்துபுரத்தை சேர்ந்த ஷியபா,  கந்து வட்டி காரர்களிடம் இருந்து காப்பாற்ற கோரி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் குழந்தைகளுடன் மனு கொடுத்தனர்

இது தொடர்பாக, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பள்ளிப்பட்டி லூர்துபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.ஷியபா என்பவர் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நானும், எனது கணவர் ராஜ்குமார் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த 2019 ம் ஆண்டில், நானும் எனது கணவரும் பைனாான்ஸ் உரிமையாளர் ஜெ.பி.நாதன் மற்றும் அவரது மனைவி எலிசபெத்ராணி, மகள் ராணி, அஞ்சலி ஆகியோரிடம் ரூ 4.5 லட்சம் கடன் வாங்கினோம். 15 நாட்களுக்கு வட்டி மட்டும் கட்டச் சொல்லி பணத்தை வசூல் செய்தனர்.

இதுவரை, அசல், வட்டி என ரூ 25 லட்சம் வசூல் செய்துள்ளனர். மேலும் ரூ40 லட்சம் கட்ட வேண்டும் எனக்கூறி மிரட்டி வருகின்றனர். கந்து வட்டி தொழில் செய்து வரும் மேரிஸ்டெல்லா என்பவரிடம் ரூ4.5 லட்சம் கடன் வாங்கி ரூ 10 லட்சம் அசல், வட்டி கட்டியுள்ளேன். மீண்டும் ரூ 7 லட்சம் தரவேண்டும் என மிரட்டுகின்றனர். இவர்களின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்துள்ளேன்.

மேற்கண்ட நபர்கள் எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியும், தகாத வார்த்தைகளால் எங்களை அசிங்கப்படுத்துகின்றனர். எனவே மேற்கண்ட நபர்களிடம் இருந்து எங்களை மீட்க வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Updated On: 23 Sep 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...