/* */

தருமபுரி தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை

தருமபுரி தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தருமபுரி தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை
X

தருமபுரி தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2022-ம் ஆண்டு சேர்க்கைக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் தொழிற் பிரிவுகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பிட நேரடி சேர்க்கைக்கான (POT ADMISSION) 30.08.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கை 30.09.2022 வரை நடைபெறவுள்ளது.

வயது வரம்பு: 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 உச்சவயதுவரம்பு இல்லை.

கல்வி தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ள பிரிவு : கம்பியான் (Wireman) (2 வருடம்), பற்றவைப்பவர் (Welder) (1 வருடம்) 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் : கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிடேண்ட் (கோபா) (1 வருடம்), கட்டடட வரைவாளர் (2 வருடம்), மின்பணியாளர் (2 வருடம்), பொருத்துநர் (2 வருடம்), கம்மியர் மோட்டார் வண்டி (2 வருடம்), கம்மியர் மாய் என்ஜின் (1 வருடம்), கடைசலர் (2 வருடம்) மற்றும் இயந்திர வேலையாள் (2 வருடம்) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 2022ல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின்படி பதிவேற்றம் செய்யலாம்.

எனவே தகுதியுள்ள இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்கள் மற்றும் விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்கப் பெறாதவர்கள் இதனை ஒரு வாய்ப்பாக கருதி மீண்டும் நேரடி சேர்க்கையில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்டணங்களுடன் நேரில் வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. Criginal Certificate SSLC (or) 10th Pass 9th Mark , 2. Original T.C 3. Original Community 4. ஆதார் அட்டை 5. அலைபேசி எண்கள், 6. மார்பளவு புகைப்படம்-1, பயிற்சி காலத்தின்போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், விலையில்லா வரைபட கருவிகள், விலையில்லா மடிகணினி, விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவிண்டி, விலையில்லா பேருந்து பணய அட்டை விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. பெண் பயிற்சியாளர்களுக்கும் விடுதி விரைவில் துவங்கப்படவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு 96886 75686, 97874 40280, 96882 37443 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Sep 2022 7:56 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?