/* */

புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு: நகை வணிகர்கள்அடையாள வேலை நிறுத்தம

500 க்கும் மேற்பட்ட தங்க நகைகடைகளை இரண்டு மணி நேரம் அடைத்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு: நகை வணிகர்கள்அடையாள வேலை நிறுத்தம
X

புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தங்க நகை வணிகர்கள்

தங்க நகைகளுக்கு huid ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய உத்திரவு கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தங்க நகை தயாரிப்பாளர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் ராஜவீதி, பெரியகடை வீதி உட்பட நகரில் உள்ள தங்க நகை தயாரிப்பாளர்கள், 500 க்கும் மேற்பட்ட தங்க நகை கடைகளை இரண்டு மணி நேரம் அடைத்து, மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணி முதல் 11.30 வரை கடைகளை அடைத்து , கடைகளின் முன்பாக கோரிக்கை அட்டைகளுடன் நகை கடை உரிமையாளர்களும், ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய நடைமுறையால் சிறு, குறு தங்க நகை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , Huid முத்திரை கட்டாயம் என்ற புதிய நடை முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தின்போது வலியுறுத்தினர். கோவை உட்பட தமிழகம் முழுவதும் போதுமான ஹால்மார்க் மையங்கள் இல்லாததால், தயாரிக்கப்பட்ட தங்க நகைகள் டன் கணக்கில் தேக்கம் அடைந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள், புதிய நடைமுறையை தவிர்த்து பழைய முறையே தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்க நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Updated On: 23 Aug 2021 6:45 AM GMT

Related News