/* */

கோவையில் ஒரே நாளில் 3653 பேருக்கு கொரோனா தொற்று ; 2 பேர் உயிரிழப்பு

கோவையில் இன்று ஒரேநாளில் 3653 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; 2 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

கோவையில் ஒரே நாளில் 3653 பேருக்கு கொரோனா தொற்று ; 2 பேர் உயிரிழப்பு
X

கொரோனா பரிசோதனை

கோவையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 263 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 3653 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 79 ஆயிரத்த 225 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 18236 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 1383 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரத்து 447 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2542ஆக அதிகரித்துள்ளது.

Updated On: 21 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. திருவண்ணாமலை
    தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் உணவு சாப்பிட்ட கலெக்டர்
  5. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  9. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  10. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?