/* */

கோவையில் ஒரே நாளில் 85 விளம்பர பலகைகள் அகற்றம்

கோவை மாநகரப் பகுதிகளில் ஒரே நாளில் 85 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கோவையில் ஒரே நாளில் 85 விளம்பர பலகைகள் அகற்றம்
X

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே விளம்பர பலகைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் விளம்பர பலகை சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழு அமைத்து கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகராட்சிப் பகுதிகளில் 100 வார்டுகளிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது:-

கோவை மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 80 சதவீத விளம்பரப் பலகைகள் ஏற்கெனவே அகற்றப்பட்டுவிட்டன.

வடக்கு மண்டலத்தில் 26, கிழக்கு மண்டலத்தில் 8, மேற்கு மண்டலத்தில்16, தெற்கு மண்டலத்தில் 24, மத்திய மண்டலத்தில் 11 என மொத்தம் 85 விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பாலக்காடு சாலை, ஈச்சனாரி சாலை, பேரூர், ராமநாதபுரம், சிங்கா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

மேலும், சில இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களில் அகற்றப்படாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

Updated On: 4 Jun 2023 3:21 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!