/* */

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரிப்பு தமிழக அரசு உத்தரவு

அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தபடி டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரிப்பு தமிழக அரசு உத்தரவு.

HIGHLIGHTS

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரிப்பு தமிழக அரசு உத்தரவு
X

சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தபடி டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரிப்பு தமிழக அரசு உத்தரவு.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தில் டாஸ்மாக்கில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15,090 விற்பனையாளர்கள் 3,158 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம், 25,009 பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாக 2021 ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் செலவாகும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.

இந்நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.12,750-ல் இருந்து ரூ.13,250 ஆகவும், கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.12,750-ல் இருந்து ரூ.13,250 ஆகவும், விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.10,600-ல் இருந்து ரூ.11,100 ஆகவும், உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.9,500-ல் இருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

Updated On: 25 Sep 2021 10:25 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது