/* */

பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்

டிசம்பர் 3.இயக்கம் சார்பில் அம்பத்தூரில் பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்
X

டிசம்பர்  3 இயக்கம் சார்பில் அம்பத்தூர் ஓரடகம் பகுதியில் நடைபெற்ற இலவச பொது மருத்துவமுகாம்

சென்னை அம்பத்தூர் அருகே டிசம்பர் 3 இயக்கம் மற்றும் அம்பத்தூர் மாற்றுத்திறனாளிகள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து சிகிச்சை பெற்றனர்.

சென்னை அடுத்த அம்பத்தூரில் உள்ள ஒரகடத்தில் டிசம்பர் 3 இயக்கம், அம்பத்தூர் மாற்றுத் திறனாளிகள் இயக்கம், ஃபிளமிங்கோ மருத்துவமனை மற்றும் டாபியா ஆகியோர் இணைந்து நடத்திய பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு யோக நரசிம்மன் தலைமை வகித்தார். நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக டிசம்பர் 3.இயக்கத்தின் மாநில தலைவரும், பேராசிரியருமான தீபக், ஃபிளமிங்கோ மருத்துவமனையின் மருத்துவர் சக்கரவர்த்தி, தமிழ்நாடு சிறப்பு காவல் மருத்துவமனையின் மருத்துவர் லாவண்யா ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடக்கி வைத்தனர்.

இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம் , சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனை செய்து பொதுமக்கள் பயனடைந்தனர். மேலும் மருத்துவ பரிசோதனை செய்த பொது மக்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கப்பட்டது.




Updated On: 3 Oct 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்