/* */

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சு திணறல் காரணமாக அப்போலோவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தற்போது உடல்நிலை கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்
X

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் 

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நல குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு திணறல் காரணமாக அப்போலோவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், மதுசூதனன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது. மதுசூதனன் அதிமுக தலைவர்களின் மூத்தவரும் மிக முக்கியமானவரும் கூட.ஜெயலலிதா ஆட்சியின்போது இவருக்கு கைத்தறித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ. பன்னீர்செல்வத்துக்கு இவர்தான் முதலில் ஆதரவு தெரிவித்தவர். கடந்த மாதம் 20 ம் தேதி அப்போலோவில் மதுசூதனனை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்ற போது அதே நேரத்தில் சசிகலாவும் வந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Updated On: 4 Aug 2021 4:34 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்