/* */

இலங்கை அரசு திவால்: மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

இலங்கை அரசு திவால்: மத்திய வங்கி அறிவிப்பு
X

இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார சரிவு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்து வருவதால், பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இந்நிலையில், அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய பொருளாதார சரிவில் இருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் விழி பிதுங்கி இருக்கும் இலங்கை அரசுக்கு உலக வங்கியின் 160 மில்லியன் டாலர் கடன் பெரும் உதவியாக இருந்தாலும், இலங்கை முதல் முறையாக திவாலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. பணவீக்கம் 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கும் என அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த கடன் அளவை மறு சீரமைக்கும் வரை இலங்கை அரசால் கடனுக்கான எந்த தொகையையும் செலுத்த முடியாது என இலங்கைக்கு கடன் கொடுத்தவர்களிடம் தெரிவித்துள்ளனர். இலங்கை நாணயம் மற்றும் பொருளாதார நெருக்கடி இந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நியச் செலாவணி இருப்பு கூட இல்லாமல் இலங்கை பரிதவித்து வருகிறது.

Updated On: 22 May 2022 5:57 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  5. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  7. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  8. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு