/* */

கணவர் இறப்பில் சந்தேகம், விசாரணை கோரி மனு

கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணைக்கு உத்தரவிட விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு கர்ப்பிணி பெண் கோரிக்கை

HIGHLIGHTS

கணவர் இறப்பில் சந்தேகம், விசாரணை கோரி மனு
X

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (26). பட்டதாரி ஆசிரியரான இவருக்கும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஏரத்துமக்காள்பட்டியைச் சேர்ந்த அரசு கட்டிட ஒப்பந்ததாரர் நவநீதகிருஷ்ணன் (36) என்பவருக்கும் கடந்த 2018 ஜனவரி 28ம் தேதி திருமணம் நடைபெற்றது.

கணவர் வீட்டார் சீர்வரிசை, வரதட்சணை கேட்டு சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ராமலட்சுமி கர்ப்பமடைந்தார். ஏற்கனவே இருமுறை கருகலைந்து உள்ளதால் உடல் பலவீனமாக இருப்பதால், தாய் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த இருபதாம் தேதி இரவு தன் கணவருடன் தொலைபேசியில் பேசிய பின்பு உறங்கச் சென்றுள்ளார். ஆனால் மறுநாள் காலை 21ம் தேதி கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கணவர் வீட்டில் இருந்து தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.

ராமலட்சுமி அங்கு சென்ற பொழுது கணவர் சடலத்திற்கு அருகே செல்ல விடாமல் கணவர் குடும்பத்தினர் சூழ்ந்து கொண்டனர். அப்போது ராமலட்சுமி மயங்கி விழுந்த நிலையில் சற்று நேரத்தில் சடலத்தை எடுத்துச் சென்று புதைத்துவிட்டனர்.

தற்கொலைக்கான காரணம் கேட்டபோது கணவரின் தாய்மாமா மற்றும் அவரது மகன் ஆகியோர் ராமலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்க வந்தனர்.

கணவரின் சாவில் சந்தேகம் உள்ளதாக கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, போலீசார் புகாரைப் பெற மறுத்துவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

எனவே, தன் கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தி தன் கணவரின் இழப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கர்ப்பிணியான ராமலட்சுமி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Updated On: 27 April 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!