/* */

விருதுநகரில் கிராம நிர்வாக அலுவலர்கள் மாநில சங்க கூட்டம்

விருதுநகரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில கூட்டம் மற்றும் நாள்காட்டி வெளியீட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

விருதுநகரில் கிராம நிர்வாக அலுவலர்கள் மாநில சங்க கூட்டம்
X

விருதுநகரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில கூட்டம் மற்றும் நாள்காட்டி வெளியீட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் மாநில சங்க கூட்டம் மற்றும் நாட்குறிப்பு வெளியீடு.

விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில கூட்டம் மற்றும் காலண்டரை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு நாட்காட்டியினை வெளியிட்டார்.

மேலும் பேசிய அமைச்சர் முதியோர் உதவித்தொகை விதவை திருமண பதிவுச் சான்றிதழ் வாங்க வருபவரிடம் கனிவாகவும் பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். மேலும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து அரசு பணியாளர்களின் சங்கங்களின் போராட்ட காலங்கள், பணிக்காலமாக வரன்முறைபடுத்த வலியுறுத்த வேண்டும், உறுப்பினர்களுக்கு குரூப் இன்சூரன்ஸ் அமைக்க சந்தா வசூல் செய்து அதற்கென்று ஒரு குழு அமைக்க வேண்டும்,

விஏஓ பதவியினை மீண்டும் டெக்னிகல் பதவி என அறிவிக்க வேண்டும், வி.ஏ.ஓக்கள் சட்டம், ஒழுங்கு தொடர்பாக மற்றும் சான்றுகள் தொடர்பாக களப்பணி விசாரணைக்கு சென்று வருவதற்கு உதவியாக அரசு இருசக்கர வாகனம் மற்றும் எரிபொருள் செலவினம் வழங்க வேண்டும், உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றினர். மேலும் இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜன் சேதுபதி தலைமை தாங்கினார்

மேலும் மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட பத்திரிக்கை செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட அமைப்புச் செயலாளர் கருப்பசாமி ,மாவட்ட துணைச் செயலாளர் பலவேசம், மாவட்ட இணைச் செயலாளர் கணேசன் ,ஹலிலூர் ரஹ்மான், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 11 Jan 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  2. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  3. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  4. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  6. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  7. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  8. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  9. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  10. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!