/* */

விருதுநகர் சீனிவாசபெருமாள் ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிறப்பு அலங்காரத்தில் சீனிவாசப்பெருமாள் - ஸ்ரீதேவி - பூதேவி சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்

HIGHLIGHTS

விருதுநகர் சீனிவாசபெருமாள் ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
X

விருதுநகர் சீனிவாசப்பெருமாள் கோவில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

விருதுநகர் சீனிவாசப்பெருமாள் கோவில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

விருதுநகர் ஸ்ரீராமர் கோவில் வளாகத்தில் உள்ள சீனிவாசப்பெருமாள் சந்நிதியில் , புரட்டாசி மாத பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, சீனிவாசப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்னர், சந்நிதியில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சீனிவாசப்பெருமாள் - ஸ்ரீதேவி - பூதேவி சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் பிரமோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, தினமும் சீனிவாசப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், வரும் அக்டோபர் 5ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள்செய்து வருகின்றனர்.

Updated On: 29 Sep 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு