/* */

பேரூராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கவுன்சிலர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

HIGHLIGHTS

பேரூராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

வ.புதுப்பட்டி பேரூராட்சி தலைவர் மீது, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்

விருதுநகர் மாவட்டம், வ.புதுப்பட்டி பேரூராட்சித் தலைவர் மீது, கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

வ.புதுப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. திமுக கட்சியைச் சேர்ந்த சுப்புலட்சுமி பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், பேரூராட்சி துணை தலைவர் சுதா மற்றும் கவுன்சிலர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

இது குறித்து துணை தலைவர் சுதா கூறும்போது, வ.புதுப்பட்டி பேரூராட்சியில் கடந்த ஓரண்டாக மன்றக் கூட்டங்கள் சரியாக நடைபெறவில்லை. மேலும் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான டெண்டர் விடும் பணிகளில் வெளிப்படைத் தன்மை இல்லை. மன்றத்தில் வரவு, செலவுகள் குறித்து கூறுவதும், அதுபற்றி விவாதிப்பதும் நடைபெறவில்லை. டெண்டர்கள் குறித்து கேள்வி எழுப்பினால் பேரூராட்சி தலைவரும், செயல் அலுவலரும் சரியான பதில் கூறுவதில்லை. கவுன்சிலர் களுக்கு விளக்கம் கூற வேண்டிய அவசியமில்லை என்று எதேச்சதிகாரமாக கூறுகின்றனர்.

என்வே கடந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்து வெளிநடப்பு செய்யப்பட்டது. மேலும் பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சி தலைவர் மீது கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அங்கீகரிக்க வேண்டும் என வவியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

ஆட்சியர் ஜெயசீலனிடம், பேரூராட்சி துணை தலைவர் சுதா, 2வது வார்டு உறுப்பினர் சித்திரா, 4வது வார்டு உறுப்பினர் வள்ளி, 5வது வார்டு உறுப்பினர் வின்சென்ட்ராஜ், 6வது வார்டு உறுப்பினர் பீட்டர், 8வது வார்டு உறுப்பினர் பொன்னையன், 9வது வார்டு உறுப்பினர் வேலுச்சாமி, 10வது வார்டு உறுப்பினர் மீனா, 15வது வார்டு உறுப்பினர் ஆனந்தராஜ் உள்ளிட்ட வர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Updated On: 31 May 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...