/* */

விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகளில் மின் விளக்குகள் அமைக்க கலெக்டர் தடை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் மின் விளக்குகள் அமைக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகளில் மின் விளக்குகள் அமைக்க கலெக்டர் தடை
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன்.

மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க அரசு தடை விதித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஊராட்சிகளில் தெரு மின் விளக்குகளை பராமரித்தல், கொள்முதல், தோ்வு செய்தலில் அதிக அளவில் மாறுபாடு காணப்படுவதால், மறு உத்தரவு வரும் வரை சில நிபந்தனைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

அதன்படி, ஊராட்சிகளில் எந்தவொரு நிதியிலிருந்தும் உயா் கோபுர மின் விளக்குகள், சிறு மின் கோபுர விளக்குகள், ஒன்றுக்கும் மேற்பட்ட விளக்குகள் கொண்ட கம்பங்களுடன் கூடிய தெரு விளக்குகள் அமைக்க தடை விதிக்கப்படுகிறது.

சூரிய உயா் கோபுர விளக்குகள் அமைப்பதும் மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்படுகிறது. இதையும் மீறி கொள்முதல் செய்யும் அலுவலா்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், தொடா்புடைய அலுவலரிடமிருந்து இதற்கான செலவுத் தொகை முழுவதும் பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் அவர் தெரிவித்து உள்ளார்.

Updated On: 17 Jan 2022 11:04 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு