/* */

வீட்டுமனை தகராறு வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

திருவண்ணாமலையில் வீட்டுமனை தகராறில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

வீட்டுமனை தகராறு வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
X

பைல் படம்.

திருவண்ணாமலை பேகோபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமாக தச்சம்பட்டு அருகில் உள்ள கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் வீட்டுமனை உள்ளது.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான சவுந்தர்ராஜன் என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது.

கடந்த 6.5.2015 அன்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தச்சம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் சவுந்தர்ராஜன், அவரது தாய் லட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கவியரசன் தீர்ப்பு வழங்கினார். இதில் சவுந்தர்ராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டையும், ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் சவுந்தர்ராஜனின் தாய் லட்சுமியை விடுதலை செய்தார்.

Updated On: 27 Jan 2022 5:26 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?