/* */

திருவண்ணாமலை வழியாக கச்சிகுடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில்

கச்சிகுடா-மதுரை இடையே திருவண்ணாமலை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் வரும் 17-ம் தேதி (நாளை) முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை வழியாக  கச்சிகுடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில்
X

பைல் படம்

கச்சிகுடா-மதுரை இடையே திருவண்ணாமலை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் வரும் 17-ம் தேதி (நாளை) முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் கச்சிகுடா பகுதியில் இருந்து திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி வழியாக மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயில் வரும் 17-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது. கச்சிகுடா ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு குண்டூர், ஓங்கோல், நெல்லூர் வழியாக திருப்பதியை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வந்தடைகிறது.

பின்னர், திருப்பதியில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு சித்தூர் (முற்பகல் 11.18 மணி-11.20), காட்பாடி (பகல் 12.10-12.15), திருவண்ணாமலை (பிற்பகல் 2.17-2.18), விழுப்புரம் (பிற்பகல் 3.30-3.35), விருத்தாசலம் (மாலை 4.12-4.14), ஸ்ரீரங்கம் (மாலை 5.35 - 5.37), திருச்சி (மாலை 6.10 - 6.15), திண்டுக்கல் (இரவு 7.12-7.15) வழியாக மதுரை ரயில் நிலையத்தை இரவு 8.45 மணிக்கு சென்றடைகிறது.

இதையடுத்து, மதுரையில் இருந்து புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திண்டுக்கல் (காலை 6.22 - 6.25), திருச்சி (காலை 8 - 8.05), ஸ்ரீரங்கம் (காலை 8.25 - 8.27), விருத்தாசலம் (காலை 9.50 - 9.52), விழுப்புரம் (காலை 10.35 - 10.40), திருவண்ணாமலை (முற்பகல் 11.51 - 11.53), காட்பாடி (பகல் 1.35 - 1.40) சித்தூர் (பிற்பகல் 2.13 - 2.15) வழியாக திருப்பதி ரயில் நிலையத்தை மாலை 4.35 மணிக்கு சென்றடைகிறது.

பின்னர், திருப்பதியில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், குண்டூர் வழியாக கச்சிகுடா ரயில் நிலையத்தை வியாழக்கிழமை காலை 7.05 மணிக்கு சென்றடைகிறது. கச்சிகுடா முதல் மதுரை வரை 21 நிலையங்களில் வாராந்திர சிறப்பு ரயில் நிறுத்தப்படவுள்ளது.

முதற்கட்டமாக, கச்சிகுடாவில் இருந்து ஏப்ரல் 17-ம் தேதி முதல் வரும் ஜுன் 26-ம் தேதி வரையும் மற்றும் மதுரையில் இருந்து ஏப்ரல் 19-ம் தேதி முதல் வரும் ஜுன் 28-ம் தேதி வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மார்க்கத்தில் இருந்தும் தலா 11 முறை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

Updated On: 17 April 2023 5:16 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  2. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  3. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  6. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  7. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  8. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?