/* */

திருவண்ணாமலையில் வாக்கு சேகரித்த அமைச்சர்! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலையில் வாக்கு சேகரித்த அமைச்சருக்கு வெற்றிவேல் வீரவேல் வழங்கி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் வாக்கு சேகரித்த அமைச்சர்! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
X

அமைச்சருக்கு வீரவேல் வழங்கிய நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, நகரின் பல்வேறு இடங்களில் அமைச்சா் எ.வ.வேலு வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருவண்ணாமலையில் காந்தி சிலை இருந்த பகுதியில் இருந்து தொடங்கி பெரிய தெரு, பே கோபுரத் தெரு, திருவூடல் தெரு சந்திப்பு, செங்கம் சாலை, சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, ரமணாஸ்ரமம் வரை அமைச்சா் எ.வ.வேலு நடந்தே சென்று பொதுமக்கள், வணிகா்கள், கல்லூரி மாணவ, மாணவிகளிடம் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருவண்ணாமலை பெரிய தெருவில் வாக்கு சேகரிக்க சென்ற போது அருணாச்சலேஸ்வரர் கோயில் சிவாச்சாரியார் ஹாலாசியனாதர், உள்ளிட்ட சிவாச்சாரியார்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.


தொடர்ந்து கோபுர தெரு பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் பூசணிக்காய் சுற்றியும் அமைச்சரே வரவேற்றினார்.

அதனைத் தொடர்ந்து சோமவார குள தெரு, செங்கம் ரோடு ஜங்ஷன், ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம், ரமணாஸ்ரமம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நடந்தே சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பாஜக அரசால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட கொடுமைகளும், துரோகங்களையும் எடுத்துக் கூறியும், திமுக அரசின் மூன்று ஆண்டு சாதனைகளை துண்டு பிரசுரங்களாக வழங்கியும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.


வாக்கு சேகரிக்க வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வெற்றிவேல் வீரவேல் வழங்கியும் மாலைகள் அணிவிக்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்வில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே .கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய் ரங்கன், நகர மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், ஸ்ரீதேவி பழனி மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள், உள்ளிட்ட ஏராளமான திமுக கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 April 2024 2:55 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு