/* */

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி

மாதாந்திர உதவித் தொகை பெற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்- திருவண்ணாமலை ஆட்சியர் தகவல்.

HIGHLIGHTS

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி
X

மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது. 10ம் வகுப்பு பதிவு செய்தவருக்கு காலாண்டுக்கு ரூ.600, தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.900, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.1200, பட்டம், முதுகலை பட்டம் பதிவு செய்தோருக்கு ரூ.1800 வீதம் 3 ஆண்டுக்கு வழங்கப்படும்.

பதிவுதாரர்கள் http://tnvelaivaaippu.gov.in இணையத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வேலை வாய்ப்பு அலுவலரிடம் வழங்கி பயன் பெறலாம். அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் உரிய சான்று நகல்கள், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்கள், உள்ளிட்ட ஆவணங்களுடன் இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குறைந்தது ஒரு ஆண்டு நிறைவு செய்தால் போதும். 10ம் வகுப்பிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.1800, பிளஸ்2 பதிவு செய்தவருக்கு ரூ.2250, பட்டதாரிகளுக்கு ரூ.3000 வீதம் 10 ஆண்டுக்கு வழங் கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 45 வயதுக்கு மிகாமல், மற்ற பிரிவினர் 40 வயது மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72,000-க்கு மிகையாமல் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 11 May 2022 11:55 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்