/* */

இங்கிலாந்து சர்வதேச விருது: இறுதிபோட்டிக்கு திருவண்ணாமலை மாணவி தேர்வு

50 இறுதிப்போட்டியாளர்களில் தமிழக மாணவி உள்பட இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்

HIGHLIGHTS

இங்கிலாந்து சர்வதேச விருது: இறுதிபோட்டிக்கு  திருவண்ணாமலை மாணவி  தேர்வு
X

வினீஷா உமாசங்கர்

இங்கிலாந்து வழங்கும் சர்வதேச விருது- இறுதி 50 போட்டியாளர்களில் ஒருவராக திருவண்ணாமலை மாணவி வினிஷா தேர்வு

கற்றல் மூலமாக சமூகத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ள தலைசிறந்த மாணவர் ஒருவரை உலக அளவில் தேர்வு செய்து ரூ.82 லட்சம் பரிசுத்தொகையுடன் கூடிய இந்த விருதை பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு 122 நாடுகளைச் சேர்ந்த 3,851 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 50 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 50 மாணவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும்.

இந்த 50 இறுதிப்போட்டியாளர்களில் தமிழக மாணவி உள்பட இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். திருவண்ணாமலை தனியார் பள்ளி மாணவி வினிஷா உமா சங்கர் (16), பஞ்சாப் மாநிலம் லூதியானா பள்ளி மாணவி நம்யா ஜோஷி (16), குஜராத் மாநிலம் காந்தி நகர் குஜராத் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்க மருத்துவக் கல்லூரி மாணவர் கிளாட்சன் வகேலா (25), ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பள்ளி மாணவர் பத்மாக்ஷ் கண்டேல்வால் (17), பஞ்சாப் மாநிலம் மொகாலி பொறியியல் கல்லூரி மாணவர் ரவீந்தர் பிஷ்னோய் (20, ஆகியோர் இறுதிப்போட்டியாளர்களாக இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

தனது 12-வது வயது முதல் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி வரும் தமிழக மாணவியான வினிஷா உமாசங்கர் சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டி, மின்சாரத்தை வெகுவாக மிச்சப்படுத்தும் ஸ்மார்ட் மின்விசிறி உள்ளிட்டவைகளை கண்டு பிடித்துள்ளார். பல அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் பங்கேற்று சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகளை பெற்றுள்ளார்.

தேர்வு செய்யப்பட்டுள்ள 50 பேரில் இருந்து 10 இறுதிப் போட்டியாளர்கள் அடுத்த மாதம் தேர்வு செய்யப்படுவர். இந்த 10 பேரில் இருந்து இறுதி வெற்றியாளர் ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்படுவார்

Updated On: 20 July 2023 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  2. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  3. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  4. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  7. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  8. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  9. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  10. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...