/* */

திருவண்ணாமலை செய்திகள்: மின்சாரம் தாக்கி கல்லூரி பேராசிரியை உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே துணிகளை காய வைத்தபோது மின்சாரம் தாக்கி கல்லூரி பேராசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற கணவரும்-மகனும் காயம்

HIGHLIGHTS

திருவண்ணாமலை செய்திகள்: மின்சாரம் தாக்கி கல்லூரி பேராசிரியை உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரழந்த கல்லூரி பேராசிரியை கலையரசி

திருவண்ணாமலை மாவட்டம் சடையனோடை கிராமத்தைச் சேர்ந்தவர் உத்தராசா (48). இவருடைய மனைவி கலையரசி (45). இவர், திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கணினி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களது மகன் கிரிஷ்வரன் (15).

கலையரசி, துவைத்த துணிகளை காய வைக்க கொடிக்கம்பியில் போட்டுள்ளார். அப்போது, மழையின் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு கொடிக்கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால் ஈரத் துணியை கம்பியில் போட்டதும் கலையரசி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது கணவரும், மகனும் சேர்ந்து கலையரசியை காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்களையும் மின்சாரம் தாக்கியது.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி கலையரசி பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த கணவர் உத்தராசா, மகன் கிரிஷ்வரன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தவாசி அருகே நடுக்குப்பம் கிராமத்தில் இடி தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தென்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சொர்ணம். 38 வயதான சொர்ணம் நடுக்குப்பம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளார். தொடர் மழை காரணமாக வயலில் குடை பிடித்துச் சென்றபோது இடி தாக்கியதில் சொர்ணம் நிகழ்விடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த சொர்ணத்தின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மழையால் சுவர் விழுந்து மேஸ்திரி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்படூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு வயது ( 50), இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள அவரது நிலத்திற்கு காலை சுமார் 6 மணியளவில் சென்று அங்குள்ள மாட்டில் பால் கறந்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் அவர் நிலத்தில் உள்ள வீட்டின் அருகில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக வீட்டின் ஒரு பக்க மண் சுவர் சரிந்து சேட்டு மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டில் இருந்து நிலத்திற்கு சென்ற சேட்டு வராததால் அவருடைய மனைவி நிலத்திற்கு வந்து பார்த்தார். அப்போது சேட்டு மீது சுவர் இடிந்து விழுந்தது உயிரிழந்ததை கண்ட மனைவி கதறி அழுதார். இந்த சத்ததை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இடுபாடுகளில் சிக்கி இருந்த சேட்டுவின் உடலை வெளியே எடுத்தனர்.

பின்னர் அங்கு இருந்த நபர்கள் திருவண்ணாமலை தாலூக்கா காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 14 Nov 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  2. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  4. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  5. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  6. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  7. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  8. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்