/* */

அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்கிறது; ஜி.கே.வாசன் பேட்டி

நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

HIGHLIGHTS

அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்கிறது; ஜி.கே.வாசன் பேட்டி
X

தமாக தலைவர் ஜிகே வாசன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்பு திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி நீடிக்கிறது. கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்

மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்றுக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் முழுமையாக நடக்க வேண்டும். சட்ட மசோதாக்கள் அனைத்தும் விவாதம் செய்து நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சிகள் அவையை முடக்கக்கூடாது என்று கூறினார்

தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் மற்ற மொழிகளுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை குறைக்கக்கூடாது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தி.மு.க. நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார்.

Updated On: 13 Dec 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...