/* */

திருவண்ணாமலை தொகுதி: சூரியனின் பிரகாசத்தால் மேலும் சூடான அக்னி ஸ்தலம்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை தொகுதி: சூரியனின் பிரகாசத்தால் மேலும் சூடான அக்னி ஸ்தலம்
X

திமுக வேட்பாளர் அண்ணாதுரை அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்

தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதியில் திருவண்ணாமலை 11 வது தொகுதியாகும்.

அதன்படி திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகள் புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்திலும் அமைந்துள்ளன.

திருப்பத்தூர் மக்களவை தொகுதியாக இருந்த இந்த தொகுதி, மறுசீரமைப்புக்கு பின் திருவண்ணாமலை தொகுதியாக மாற்றப்பட்டது. திருப்பத்தூர் தொகுதியாக இருந்தபோது 1957 முதல் 2004 வரை நடைபெற்ற 10 தேர்தல்களில் 7 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன. தொகுதி சீரமைப்பிற்கு பின்னர் அதிமுக ஒரேயொரு முறை மட்டுமே இங்கு வெற்றி பெற்றுள்ளது

திமுகவின் டி.வேணுகோபால் 4 முறை இத்தொகுதியின் எம்.பியாக இருந்துள்ளார். திருவண்ணாமலை தொகுதியாக 2009-ல் மாற்றப்பட்ட பின்னரும் அவரே அத்தொகுதியின் முதல் எம்.பியாக தேர்வானார்.

திருவண்ணாமலை தொகுதியாக மாற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற 3 தேர்தல்களில் திமுக இரு முறை வெற்றிபெற்று திருவண்ணாமலை தனது கோட்டை என்பதை நிரூபித்துள்ளது.

திருவண்ணாமலை தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 1521787

ஆண் வாக்காளர்கள்: 7,49,000

பெண் வாக்காளர்கள்: 7,72,669

மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 118

சி.என். அண்ணாதுரை

ஆன்மீக திருத்தலங்கள் நிறைந்த திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் சி.என். அண்ணாதுரை இரண்டாவது முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார். முன்னதாக திமுகவைச் சேர்ந்த எ.வ.வேலுவின் இளைய மகன் மருத்துவரணி மாநில துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் கு.கருணாநிதிக்கு தலைமை சீட் வழங்கும் என அரசியல் வட்டாரம் எதிர்பார்த்த நிலையில், அமைச்சர் எ.வ. வேலுவின் தீவிர ஆதரவாளரான அண்ணாதுரை இந்த தேர்தலிலும் திமுகவின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அதனால் கட்சிக்கும் தொகுதிக்கும் மிக நன்கு அறிமுகமான முகமாக அவர் இருக்கிறார். அதுவே அவரது பெரிய பலமாக இருக்கிறது.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுமே தற்போது திமுக கூட்டணி வசம் உள்ளது. திமுகவில் கடந்த தேர்தலில் இருந்த கட்சிகள் அனைத்தும் தற்போது திமுக கூட்டணியிலேயே உள்ளது. அதனால் அந்த கூட்டணி மிகுந்த பலம் வாய்ந்த கூட்டணியாக கருதப்படுகிறது.

கடந்த முறை மத்தியில் எதிர்க்கட்சியாக பாஜக இருந்த காரணத்தால் திருவண்ணாமலை தொகுதி வளர்ச்சி திட்டப்பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை என்றும், வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு அளித்தால் மேலும், சி.என். அண்ணாதுரை சிறப்பாக செயல்படுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் அமைச்சர் வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சரின் மகன் கம்பன் உள்ளிட்டவர்கள் திமுக வேட்பாளருக்காக தீவிரமாக களப்பணியில் இறங்கியுள்ளனர்.

தொண்டர்களை கவனிக்கும் விதம், கூட்டணி கட்சியினரை அரவணைத்து கவனிக்கும் விதம் என அனைத்தும் வெயிட் ஆகவே உள்ளதால் வேட்பாளர் அண்ணாதுரை அவர்கள் இந்த அக்னி ஸ்தல தொகுதியில் உதயசூரியனே முன்னேறி பிரகாசிக்கும் நிலையில் உள்ளது.

அதிமுக கலியபெருமாள்

அதிமுக சார்பில் போளூர் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தீவிர விசுவாசி கலியபெருமாள், பாஜக சார்பில் அஸ்வத்தாமன், நாம் தமிழர் சார்பாக ரமேஷ் பாபு ஆகியோர் களத்தில் உள்ளனர்அவர்களில் அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் இந்த ரேசில் திடீரென்று இரண்டு நாட்களாக வேகம் எடுத்துள்ளனர்.

பாஜக வேட்பாளர் மற்றும் அதிமுக வேட்பாளர் இருவரும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

பாஜகவினர் பாமகவோடு சேர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதால் வன்னியர் ஓட்டுக்கள் சற்று கூடுதலாக பாஜக வேட்பாளர் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிலையில் திமுக முதல் இடத்திலும் இரண்டாம் இடத்தை பிடிப்பதற்கு அதிமுக மற்றும் பாஜகவினரிடையே போட்டி ஏற்படக்கூடும் என்றும் திருவண்ணாமலை வாக்காளர்கள் கூறுகின்றார்கள்.

இன்னும் வரும் நாட்களில் அதாவது கடைசி மூன்று நாட்களில் திமுக அதிமுக பாஜக வேட்பாளர்களின் தேர்தல் வேகம் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்தே வெற்றி தோல்வி அமையும்.

Updated On: 10 April 2024 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?