/* */

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் விழா ரத்து

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் விழா ரத்து
X

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று முதல் கொரோனா தடுப்பூசி, 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார். மேலும், கோவிலுக்கு சென்று இப்பணிகளை, ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோவில் எதிரே மாட வீதியில் ஆய்வு மேற்கொண்டார்.

கண்காணிப்பு பணிகள் குறித்து, போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், கூடுதல் கலெக்டர் பிரதாப், உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் தற்காலிக காய்கறி மற்றும் பூ மார்க்கெட் அமைய உள்ள திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானம் மற்றும் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள மைதானத்தையும் பார்வையிட்டு, வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த 5-ம் தேதி முதல், உத்தராயண புண்ணிய கால உற்சவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், வருகிற 14-ம் தேதி தாமரை குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும். நிகழ்ச்சியையொட்டி காலை மற்றும் இரவில் சாமி மாட வீதியுலா நடைபெற்று வந்தது. இரவு ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல், வீதி உலா ரத்து செய்யப்பட்டு கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.

இது குறித்து கோவில் முக்கிய குருக்களான ரமேஷ் மற்றும் கீர்த்திவாசனை வரவழைத்து விவரங்களை கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் முருகேஷ் கூறுகையில், இன்று முதல், வரும் 14-ந் தேதி வரை சாமி மாட வீதிஉலா பக்தர்கள் இன்றி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும். 15-ம் தேதி திருவூடல் நிகழ்ச்சி கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என்றார்.

Updated On: 10 Jan 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’