/* */

திருவண்ணாமலை ஒன்றியக்குழு கூட்டம்

Union Power Committee Chairman -திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை ஒன்றியக்குழு கூட்டம்
X

திருவண்ணாமலை ஒன்றியக்குழு கூட்டம்.

Union Power Committee Chairman - திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்டரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரமணன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் அமிர்தராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் கடந்த 8 மற்றும் 9-ந் தேதிகளில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அரசு சார்பில் நடந்த விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து கொள்வது.

காடகமான் ஊராட்சியில் ஆதிச்சநல்லூர் செல்லும் சாலையில் தார் சாலை அமைப்பது, ஏந்தல் ஊராட்சியில் சிறுபாலம் கட்டுவது, அய்யம்பாளையம் ஊராட்சி பிள்ளையார் கோவில் குளத்திற்கு தடுப்புச்சுவர் அமைப்பது, அடிஅண்ணாமலை ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் சிறுபாலம் மற்றும் பக்க கால்வாய் அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மன்ற அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பக்தவச்சலம், சாந்திவிஜயன், சுபாசெல்வமணி, தினகரன், முருகன், யுவராஜா உள்பட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய உதவி பொறியாளர்கள், பணிமேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் (நிர்வாகம்) கோபி நன்றி கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 July 2022 9:47 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்