/* */

திருவண்ணாமலை நகராட்சி கிராம சபை கூட்டம்

Tiruvannamalai News Today -கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவதால் உள்ளாட்சி அமைப்புகளின் வெளிப்படைத்தன்மையை பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் என, திருவண்ணாமலை கலெக்டர் கூறினார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சி கிராம சபை கூட்டம்
X

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  கலெக்டர் முருகேஷ்.

Tiruvannamalai News Today -நவம்பர் ஒன்றாம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உள்ளாட்சி தினத்தை பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல் நகராட்சிகளில் உள்ள வார்டுகளிலும் கிராம சபை கூட்ட வேண்டும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதனடிப்படையில் நேற்று, திருவண்ணாமலையில் நகராட்சியின் முதல் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, நகர்மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் ,நகராட்சி ஆணையாளர் முருகேசன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் விஜயரங்கன், வார்டு கவுன்சிலர் கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது;

ஊரக உள்ளாட்சிகளை போல், நகர் உள்ளாட்சிகளில் இன்று தொடங்கி பகுதி வாரியாக வார்டு கூட்டங்கள் தவறாமல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு நடத்தப்படுவதால் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை பொது மக்களுக்கு நேரடியாக அறிந்து கொள்ள, இது ஒரு வாய்ப்பாக அமையும்.

நகர்ப்புறங்களில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் மற்றும் மேம்படுத்தவும் மக்களின் பங்களிப்பு அவசியம். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை நிலுவையின்றி செலுத்த வேண்டும். அவ்வாறு தவறாமல் வரி செலுத்துபவர்களின் பெயர் பட்டியல், வார்டு சபா கூட்டங்களில் பெயர் விலாசங்களோடு வாசிக்க வேண்டும் என்று அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற வேண்டும்.

திருவண்ணாமலை நகராட்சி வார்டுகளில், நகராட்சி சார்பில் வசூலிக்கப்படும் வரி விகிதம் மிகவும் குறைந்த அளவாக உள்ளது. 1-வது வார்டில் மட்டும் ரூ.39 லட்சம் வரிபாக்கி இருப்பதாக நகராட்சி அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அரசால் ஒதுக்கப்படும் நிதியை வைத்து மட்டுமே, நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்ய முடியாது. பொதுமக்கள் வரியை செலுத்தினால் தான் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அனைத்து பணிகளையும் செய்ய முடியும். பொதுமக்களிடம் வரி கட்டணங்களை முறையாக வசூல் செய்யவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த 3 மாதத்திற்குள் அனைத்து வார்டுகளிலும் 90 சதவீதத்திற்கு மேல் வரிவசூலை வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் செய்ய வேண்டும். வரிவசூல் முழுமையாக நடக்க, வரிகளை செலுத்தி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, கால்வாய் தூர்வார வேண்டும், பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் பிரதாப் சிங் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Nov 2022 6:36 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்